பக்கம்:பருவ மழை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழருக்கோர் தேசியவிழாவைத் தந்தோம் "தமிழர்திரு நாளெ'னும்பேர் அதற்குத் தந்தோம்! தமிழகத்தின் தலைநகரைக் காத்துத் தந்தோம்! தமிழ்நாடெனும் பெயரைச் சூட்டித் தந்தோம்! குமரிமுனை தெற்கெல்லை யாகச் செய்தோம்! குமரன்திருத் தணிகைமலை மீட்டுத் தந்தோம்! தமிழ்ப்பயிற்சி மொழிக்கிளர்ச்சி தழைக்கச் செய்தோம்! தமிழினத்தின் தன்மானம் நிலைக்கச் செய்தோம்! வருவாய்க்குக் கடைநடத்தும் வணிக ரைப்போல் வகையாக அரசியலைப் பயன்படுத்திப் பெருவாழ்வு கடத்துகர்போல் இன்றி-என்றும் பேச்சையெலாம், எழுத்தையெலாம், உழைப்பை r யெல்லாம் எருவாக்கித் தமிழினத்தின் வாழ்வுக் காக ஏற்றமிகுங் கொள்கைகளை வகுத்து, வெற்றி உருவாக்கித் தந்ததல்லால் கழகத் தொண்டர் ஒருவருமே தன்னலத்தை கினைத்தோ ரல்லர்! தெட்சணப்ர தேசமென்னும் பூதக் தன்னைச் செந்தமிழர் தலைமீது சுமத்து தற்கு கிச்சயித்த சதிச்செயலை வீழ்த்து தற்கு நிகரில்லாக் கூட்டமைப்பு முறைவ குத்து அட்சணமே மாடல்'திராவிடமாய் வந்த அழிவுதரும் திட்டத்தை முறிய டித்து லட்சியச்சீர் தமிழரசை அமைப்ப தற்கு இடையருது முயன்றுழைத்து வெற்றி கண்டோம்! 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/61&oldid=807781" இலிருந்து மீள்விக்கப்பட்டது