பக்கம்:பருவ மழை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப்போர் குமரிதிருத் தணிகை மண்ணில் எழுச்சியுற்ற வேளையிலே கவண்விட் டேகும் கல்லப்போல்-பந்தினைப்போல்-அம்பி இனப்போல் காளையர்பல் லாயிரம்வேர் களம்பு குந்து செல்லேயா, தேவசகாயம், மா னிக்கம், திருவாலங் காட்டுக்கோ விந்த சாமி நல்லுயிரைக் கொடுத்ததுவும் வீதி யெங்கும் ரத்தத்தைச் சிந்தியதும் மறந்தா போகும்? செங்குருதி சிந்தியபின் னுயிர்கொ டுத்துச் செந்தமிழர்க் குரிமையாக்கிச் சேர்த்து வைத்த செங்கோட்டைப் பகுதிகளும் வளமி குந்த தேவிகுளம் பீருமேடும் சுயக லத்தால் இங்குகம்மை யாண்டிருந்த சிண்டி கேடர் இனமான உணர்ச்சியற்று இழந்து விட்ட சங்கையற்ற சதிச்செயலை துரோகக் தன்னைத் தன்மானத் தமிழினத்தார் மறந்தா போவார்? நிதிக்குவியல் படைக்குவியல் ஏது மின்றி நேர்மைமிகுங் கொள்கையொன்றே துணையாய்க் கொண்டு எதிரியுடன் தனித்துகின்று போரா டுங்கால் ஏளனமாய் மேடைகளில் பேசித் துாற்றிப் புதிர்போட்டும் அறிக்கைவிட்டும் புனைந்து ரைத்தும் புல்லுருவித் தமிழர்சிலர் பின்னே நின்று முதுகினிலே குத்தியும்;கம் காலை வார முயன்றும்; முக் கறுந்தகதை மறந்தா போகும்: 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/62&oldid=807782" இலிருந்து மீள்விக்கப்பட்டது