பக்கம்:பருவ மழை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியேது இவர்பிழைப்ப தென்று கூறி இருட்சிறையிலிருந்துவெளி யேற்றப் பட்டுக் கணித்தமிழாம் அமுதமுண்டு எமனை ஏய்த்துக் - கற்பனைக்கும் எட்டாத திட்டம் தீட்டித் தனித் தமிழன் குரல் கொடுத்துத் தமிழகத்தைத் தமிழர்களின் தனிச்சொத்தாய் ஆக்கித் தந்த இனத்தமிழன் சிவஞானம் தன்னைப் போற்றி ஏற்ருத தமிழனிங்கு நன்றி கொன்றேன் ! அசைபோடுங் கல்லூரிப் பயிற்சி தன்னில், அங்காடி நிறுவனத்தில், ےg},0U( யத்தில், திசைகாட்டும் பலகைகளில், நீதி மன்றில் திருமணத்தில், இழவுவிட்டில், மேடைப் பேச்சில், இசையரங்கில், வானுெலியில், நாட கத்தில் எங்கெங்கும் தாய்மொழிக்குத் துரோகக் கூட்டம்! கசப்பான உண்மை இதை மாற்ரு விட்டால் களிப்பேது? முன்னேற்றம் காண்ப தேது? பாரதத்தின் சுதந்திரப்போர் துவக்கி வைத்த பாஞ்சாலங் குறிச்சிமன்னன் கட்ட பொம்மன் தீரமிகு வ. உ. சி. இரண்டு ஜென்மச் சிறைபுகுந்து செக்கிழுத்துக் கல்லு டைத்த வீரவரலாற்றினையும் எழுச்சி யூட்டும் விடுதலையுணர்ச்சியையுங் கவியாய்ப் பெய்த பாரதியின் பெருமையையும், சங்க காலப் பைந்தமிழர் சிறப்பினையும் பரவச் செய்தோம்! 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/63&oldid=807783" இலிருந்து மீள்விக்கப்பட்டது