பக்கம்:பருவ மழை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் இமயமும் ASAeAMAM அகிலம் அனைத்தையும் காத்தருள் சேர்க்கும் ஆதியாய் நின்றிடும் ஜோதியே போற்றி! புகழும் சிறப்பெலாம் பெற்று வாழ்கின்ற பூதலம் மீதுள்ள மொழிகளுக் குள்ளே மிகமிகத் தொன்மையும் மேன்மையும் கொண்டு மேவிடும் இலக்கண இலக்கியங் கண்டு ங்கரிலாப் பொலிவுடன் வாழ்ந்திடும் எங்கள் நிதியெனும் செந்தமித் தாய்ப்பதம் போற்றி! 'ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி"யாம் பாரதிக்குச் சீரார் விழாவெடுக்கச் சிந்தைகனிந்து வந்த பேரார்வம் கொண்டோரே! பெரியோரே! தாய்க்குலமே! எல்லோர்க்கும் எந்தன் இதயம் கனிந்தகன்றி சொல்லித் தொடங்குகின்றேன் துய கவிப்பணியை! கவிதைத் தொடங்குமுன்னே கவியரங்க நாயகராய் அவையினிலே விற்றிருக்கும் அமுதத் தமிழ்க்கவிஞர் பாரதியின் பரம்பரையில் பாட்டிசைக்கக் வந்தவருள், சீருயர்ந்த மாகவிகள் சிலருண்டு, அவர்களிலே 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/65&oldid=807785" இலிருந்து மீள்விக்கப்பட்டது