பக்கம்:பருவ மழை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. து. சு. யோகியெனும் தமிழ்க்கடலும ஒருவரென மேதையர்கள் போற்றும் மேன்மைச் சிறப்புடையார்! அன்னவர்தம் தலைமையிலே அமரகவி பாரதியின் உன்னத விழாவினிலே உவந்தளித்த வாய்ப்பெண்ணிப் பெருமை யடைகின்றேன், பேருவகை கொள்கின்றேன்! என்னுேடிக் கவியரங்கில் இசைக்க வந்த மாகவிதை மன்னர்களை வாயார வாழ்த்தி வணங்குகின்றேன். தான்வாழ வகையறியார், தாரணியை வாழவைக்கத் தேன்போல் கவியிசைத்துச் செந்தமிழை வாழவைப் பார்! வான்மேவும் மழைமுகில்போல் வாரி வழங்கிவிட்டு ஊன்தேய்ந்து உடல்தேய்ந்து உழன்றிடுவார் வறுமையிலே! ஒருவனுக்குப் பாட்டிசைத்து உயர்த்திவைத்தால் அச்செல்வன் தருவான் சிலபொருளைத் தான்வாழ, அதைவிடுத்து உலகினுக்கே பாட்டிசைத்து உயர்ந்தவர்போல் தாழ்ந்தவரின் நிலைஉயர்த்த எதிர்நீச்சல் நீந்துகின்ற கல்லோர்க்கு இத்தரையில் கல்வாழ்வு ஏதவர்க்கு இங்கிருந்து செத்தபின்னர் தான்சிறப்பு சிலையெடுப்பு பாராட்டு! அதுவும் சமுதாய அந்தஸ்தில் உள்ளவர்கள் புதுவிளம் பரம்பெறவே போலியாய்ச் செய்திடுவார்! இவையெல்லாம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்திருந்தும் கவலைகாம் கொள்வதில்லை. கடமை மறப்பதில்லை. இந்தநிலை மாற்றி இன்பத்தேமிழாட்சி 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/66&oldid=807787" இலிருந்து மீள்விக்கப்பட்டது