பக்கம்:பருவ மழை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தை புரிந்ததிந்த விழாஇதற்கோர் அத்தாட்சி ஆம்: கம்பநாட்டாழ் வார்க்கும் கவிஇளங்கோ வள்ளுவர்க்கும் அம்புவியில் கிட்டாத அரும்பேறு பாரதிக்கு இன்று கிடைத்துவிட்ட இறுமாப்பால் கவிஞரினம் என்றும் தலைநிமிர்ந்து ஏறுநடை போட்டிடலாம்! அரசினரே நம்முடைய அமரகவிக் குவிழா முரசம் முழக்குகின்ருர் முன்னின்று போற்றுகின்ருர்! கன்னடத்து முதலமைச்சர், களிதெலுங்கின் முதலமைச்சர், உன்னதத் தமிழகத்து உயர்அமைச்சர் சேர்ந்துகவி மன்னனுக்கு அஞ்சலியும் வாழ்த்தொலியும் செயக் கண்டு தன்னை மறந்தோம்! தருக்குற்ருேம் தலைநிமிர்ந்தோம்! ஆலுைம், இந்தவிழா கம்முடைய ஏற்றத்தைப் போற்றுகின்ற சொந்தவிழா! மகிழ்ந்திதனைச் சுவைத்தலொன்று போதாது, பாட்டுத் திறத்தாலே பாரனைத்தும் வாழவைக்கும் நாட்டம் மிகுந்தகவி நல்லிதயக் கருத்தொலிக்கும் பாட்டனத்தும் உலகிலுள்ள பற்பலவாம் மொழிகளிலே மீட்டும் மொழிபெயர்த்து மேதினியெல்லாம்பரப்பும் நற்பணியை இப்பொழுதே காம்செய்து முடித்துவிடில் அற்பர்களின் பேராசை ஆக்ரமிப்புக் கொள்கையெலாம், கற்பனையாய், பழங்கதையாய், காலத்தால் மாய்ந்து விடும்! 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/67&oldid=807788" இலிருந்து மீள்விக்கப்பட்டது