பக்கம்:பருவ மழை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதத்தைக் கண்டிடலாம்; அறப்பணியாம் திருப்பணியை இன்றைக்கே இப்பொழுதே இக்குழுவே தொடங்கிடுதல் நன்றென்று கூறி கல்லோரின் தாள்வணங்கி வேண்டுகின்றேன் எந்தன் விருப்பம் நிறைவேற ஆண்டவன்தன் திருவருளின் ஆசியையும் கோருகின்றேன்! இருபதாம் நூற்ருண்டில் இவர்க்கிணையாய் இவ்வுலகில்: ஒருகவிஞன் தோன்றவில்லை; உண்மைவெறும் புகழ்ச்சியில்லை! தீர்க்க தரிசனம்தான் செப்பும் தரமுளதோ? போர்க்களத்தின் மத்தியிலே புரட்சிக் கண்லெழுப்பி ஆர்ப்பரித்து நின்றேகம் அடிமை விலங்குடைக்கப் போர்ப்பரணி பாடிமக்கள் புத்துணர்ச்சி கொள்ள வைத்தான்! நூற்றைம்ப தாண்டடிமை நுகத்தடிக்குத் தோள் கொடுத்து ஆற்ரு தழுதுகின்ற அவலஇருள் போக்கவந்த காந்தியெனும் பேரொளியைப் பிறர்கான முன் கண்டான்! மாந்தருக்குள் தெய்வமென்று மனக்கண்ணுல் முடிவு கட்டிப் "பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்தகாந்தி மகாத்மாரீ வாழ்க’ என்ருன்! ஈடிலாச் சுதந்திரத்தை இழந்துகொங் திருக்கையிலே "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று விடுதலை கிடைக்குமுன்பே விடுதலைப் பண்ணிசைத்து 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/68&oldid=807789" இலிருந்து மீள்விக்கப்பட்டது