பக்கம்:பருவ மழை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у பெரும் புலவர்கள் எல்லாம், மேடைகள் தோறும். எழுச்சி யோடு முழங்கியதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தமிழ் வளர்ச்சிக் கழகம் நாடகப் பரிசு’ வழங்கியும், தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் கலமாமணி” விருது வழங்கியும் பாராட்டிப் பெருமை சேர்த்திருக்கும் நிகழ்ச்சிகளே, கவிஞர் கு. சா. கி.யின் சிறப்புக்கும், திறத் திற்கும், சான்று பகர்வனவாகும், புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரசின் அமைப்பாள ராகவும், செயலாளராகவும் பணியாற்றிய நாள் முதல் கவிஞரை நான் அறிவேன். தனியரசு எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்று, புதுக்கோட்டை தனியரசு உரிமையை இழந்து இந்தியப் பெரு நாட்டின் ஒரு அங்கமாக இணைந்த பிறகு கவிஞர் தம்மை தமிழரசுக் கழகத்திற்கே ஒப்படைத்துக் கொண்டார். அன்று முதல்-இன்று வரை-ஏன் தமது ஆயுள் வரை தமிழுக்கும், தமிழினத்திற்கும். தமிழகத்திற்கும் கடமை யாற்றும் தமிழரசுக் கழகத் தொண்டராகவே இருப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நடிகர், நாடகாசிரியர், நாடக-சமுதாய-திரைப்படப் பாடலாசிரியர், திரைப்படக் கதை வசன கர்த்தா, கவிஞர், அரசியல்வாதி என்று பல்வேறு துறைகளிலும் தொடர்பு கொண்டு பணியாற்றி வரும் நண்பர் கு. சா. கி. அவர்கள் தற்காலக் கவிஞர்களில் தலைசிறந்த கவிஞராகத் திகழ்வதைக் காணுகின்ருேம் அவரது கவிதைகள் லட்சியத் தமிழகத்தை உருவாக்கப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. வீடுதோறும் இந்நூல் இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம், கவிஞருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இந்நூலை அழகுறப் பதிப்பித்துள்ள வானதி பதிப்பக உரிமையாளர் திரு. ஏ. திருநாவுக்கரசு அவர்களையும் வாழ்த்துகின்றேன். 30–7–78 歌 சென்னை ம. பொ. சிவஞானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/7&oldid=807791" இலிருந்து மீள்விக்கப்பட்டது