பக்கம்:பருவ மழை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்யும் செயல்மாண்பும் ASAMAMAMAMAMAMSAMMAMMMAMMAMSMSMSMSSASAS SSMSS என்னையும் கவிஞனென்று எண்ணியிங் கியற்றமிழ்தன் மன்னர்கள் சூழ்ந்திருக்கும் மாபெருங் கவியரங்கின் உன்னதத் தலைமையேற்க உவந்தனர் அடடா! எந்தன் அன்னையாம் தமிழணங்கின் அருளில்ை பெற்றபேறு தன்னைஎன் னென்று சொல்வேன்! தலையார வணங்குகின்றேன்! தவஞானச் செல்வரென்றித் தரணியோர் போற்று கின்ற சிவஞானச் செம்மல் காட்டும் சிறப்பான வழிபற்றிக் கவிதைகள் பாடுதற்குக் கணக்கிலாக் கவிஞருண்டு! அவர்களுள் சிலரைமட்டும் அழைத்தனர்! அழைப்பையேற்றேர் அவரவர் திறமைக்கேற்ப அரும்பொருள் தன்னைத் தந்தார்! இவண்யானே பொருள்பெரு ஏமாளியாய் நிற்கின்றேன்! ஆமாம்...! பொருளிலார்க் குலகிலெங்கும் புகலிடம் இல்லைஎன்று ஒருதனிப் பாடல் உண்டே...! அந்தஉரைதனை உடைப்பில் போட்டுத்தன்னைப்போல் பிறரை எண்ணும் தகைமைசேர் சிலம்புச்செல்வர்; 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/75&oldid=807797" இலிருந்து மீள்விக்கப்பட்டது