பக்கம்:பருவ மழை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னையிங் கமரச்செய்தார்! இனியவர் வாழ்க!-- மற்றென்... பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்ருே?" என்று சொன்னவன் கம்பன்கண்ட தூயவன் ராமனன்ருே...? என்னவே, இவர்கள்பெற்ற இணையிலாப் பொருளில் கொஞ்சம் தன்னலம் கருதிநானே தனதாக்கிக் கொளத் துணிந்தேன்; இல்லாதார் இருப்போரென்ற இழிநிலை இருக்குமட்டும் இல்லாதார் இருப்போர் தம்பால் இச்சித்தல் இயற்கைதானே! 婚 穆 蓉 உலகில் உயிர்க்குலமும் உயர்மனிதன் தோன்றியதும் இலமூரியாக் காண்டம் என்றறிஞர் கூறிடுவார்! அந்தமுதல் மனிதர் ஆதியிலே கண்டமொழி செந்தமிழாம் என்றிந்தச் செகமே புகழ்ந்துரைக்கும்! இலமூரியாக் காண்டம் எனத்தென் திசையினிலே பலவாயி ரங்காதம் பரந்து விரிந்திருந்த பன்மலையின் அடுக்கங்கள் பஃறுளியா றும்குமரிப் பொன்மலையும் கடற்கோளிற் புதையுண்டு போனது.வாம்! அமையும்.அந்த நிலைமனைத்தும் ஆழ்கடலுள் போன பின்தான் இமையப் பெருமலையே எழுந்ததுவாம் வடதிசையில்! அன்றக் கடற்கோளில் அழிக்தொழிந்தோர் போகஎஞ்சி நின்றவர்தான் குமரிமுதல் நீள்பரத கண்டமெலாம் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/76&oldid=807798" இலிருந்து மீள்விக்கப்பட்டது