பக்கம்:பருவ மழை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று குடியேறிச்சிறப்புற்று வாழ்ந்தார்கள்! என்று பலசான்று இயம்புகின்ருர் வடநாட்டில்'அரப்பா, மொஹஞ்சதரோ அகழ்ந்த நிலநூலார் சிறப்பாக முன்சொன்ன செய்தியெல்லாம் இதுதானே? மற்றும் பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பாரதத்தி லேபெரும்போர் மூண்டிருந்த வேளையிலே முன்னின்று இருபடைக்கும் கருணையுளங் கொண்டு கடமை நெறிகின்று பெருஞ்சோறு அளித்துப்பேர் பெற்ருைேர் தமிழ்மன்னன்! இமையப் படையெடுப்பில் எத்தனையோ முறைவென்று தமிழர்க் கொடிஉயர்த்தித் தருக்குடன் வாழ்ந்திருந்தார்! மாற்ருர் செருக்கடக்கி மடக்கிச் சிறைபிடித்து ஆற்றுக்குக் கரையெடுத்தான் அன்ருெருநாள் கரிகாலன்! தமிழர்தம் வீரத்தைத் தாழ்த்தி இழித்துரைத்த இமயத்து மன்னர்களின் இறுமாப்பை வீழ்த்தி, அந்தக் கனகவிஜயன் தலைமேல் கல்சுமத்திக் கொண்டுவந்து புனிதச் சிலையெடுத்தான் பூம்புகார்ச் செல்விக்கு! கலிங்கத்துப் போரினிலே காட்டியமா வீரத்தை உலகில் மனிதகுலம் உள்ளவரை புகழ்ந்துரைக்கும்! பிணிமுப்புச் சாக்காட்டைப் பெற்றிகொள்ளும் கருநெல்லிக் கனிதன்னை ஒளவைக்குக் காணிக்கை யாய்த்தந்தான்! வண்ண மயில்குளிரால் வாடும் நிலைக்கிரங்கிப் பொன்ைைடப் போர்த்திப் புகழ்பெற்ருன் ஒர்மன்னன்! அல்லல்தரும் கொடுங்காற்ருல் அலமந்துத் தலைசாய்க்கும் 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/77&oldid=807799" இலிருந்து மீள்விக்கப்பட்டது