பக்கம்:பருவ மழை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக்குத் தேர்கொடுத்து முடிவிலாக் கீர்த்தி - பெற்ருன்! வேல்புறத்தே பாய்ந்து வீழ்ந்துபட்ட மகனுக்குப் பால்கொடுத்த மார்பகத்தைப் பறித்தெறிவேன்! எனச் சீறிச் சூளுரைத்து; வீரமகன் துய்மைகண்டு போர்க்களத்தில் வாளுயர்த்தி ஆர்ப்பரித்த வனிதைத் தமிழ்மறத்தி அப்பன், அண்ணன், கொழுநன் அத்தனைபே ரும் அடுக்காய்ச் செப்பரிய போர்க்களத்தில் செத்தொழிந்தார் எனத்தெரிந்தும் வேலொழுகும் களத்திலுந்தன் வீரத்தைக் காட்டென்று பாலொழுகு பாலகன்பால் பகர்ந்தாள் ஒருதமிழ்ப்பெண்! இத்தனையும் ஏனெடுத்து இங்குரைத்தேன் எனக் கேட்டால், அத்தகைய வீரமிகும் அருமைத் தமிழர் இனம் இத்தகைய கீழ்நிலைக்கு எவ்வாறு தேய்ந்ததென்று சித்தம் வருந்துகின்றேன்; திருந்தத்தான் சொல்லுகின்றேன்! கடலாதிக்கம் புரிந்த கன்னித் தமிழ் இனத்தார் திடமற்றுப் போனதிங்கே திறன்குறைந்த தாலல்லஒற்றுமையை விட்டோம் உள்நாட்டிற் குழப்ப மிட்டோம், மற்றவர்கள் கமையாள வழிவகுத்துத் தந்துவிட்டோம். ஆரியனுக் துரானியனும் ஆந்திரனும் மராட்டியனும் சூறையிட்டார் காட்டை தொடர்ந்துவந்த வெள்ளையரோ நாட்டைப் பறித்ததன்றி கந்தமிழர்க் கலையுயர்ப்பண் பாட்டை யழிப்பதற்கே பரங்கிமொழிதனைத் திணித்தார்! 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/78&oldid=807800" இலிருந்து மீள்விக்கப்பட்டது