பக்கம்:பருவ மழை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கொடுமையெல்லாம் எதிர்த்திங்கே காந்திமகான் இந்தியநா டெங்கும் எழுச்சிக் கனல்முட்டிக் சுதந்திரம்நாம் பெற்றதையும் சொல்லாமலே அறிவீர்! வந்த சுதந்திரத்தின் வரவுசெலவுக்கணக்கை செந்தமிழர் பங்கிருந்து சீர்தூக்கிப் பார்க்கத்தான் தமிழரசுக் கழகமிந்தத் தமிழகத்தில் தோன்றியது! அமையுமிந்தக் கழகத்தின் அருந்தலைவன் சிவஞானம் ஆற்றியுள்ள சேவைக்கோர் அளவும் உண்டோ? ஏழ்மையெனும் சேற்றினிலே பூத்ததொரு செந்தாமரை போன்ருன்! விடுதலைப் போர்க்களத்தில் வெற்றிகண்டோன்! சிறைச்சாலை கொடுமைக்கு ஆட்பட்டுக் குடற்புண் பரிசுபெற்ருேன்! பாட்டாளி யாய்இருந்து பண்டிதய்ை மாறியவன்! கேட்டோர் வியந்துநிற்கும் கீர்த்திமிக்கப் பேச்சாளன்! ஜாதி பலமின்றித் தன்கைப் பொருளின்றி நீதிபலம் கொண்டு நிமிர்ந்துநிற்கும் நெஞ்சுரத்தான்! பள்ளிப் படிப்பறியான்! பைந்தமிழ்நூற் சாரமெல்லாம் அள்ளி அள்ளிச் சுவையேற்றி அமுதமெனப் பெய்திடுவான்! காந்தியும் வள்ளுவனும் கம்பன் இளங்கோவும் சாந்திசேர் வள்ளலாரும்.தமிழ்க்கவிஞன் பாரதியும் சொல்லுக்குச் சொல்வந்து துணைநிற்பார்:இங்கிவன்முன் மல்லுக்கு எவர்வரினும் மடக்கிப் புறம்காண்பான்! இலக்கியமோ அரசியலோ எந்தத் துறைகளிலும் தொலைநோக்குச் சக்திமிக்கோன்! துரயோன்! மறத் தமிழன்! நாடே எதிர்த்தாலும் கல்லதெனத் தோன்றுவதை ஆடாமல் அசையாமல் அம்பலத்தில் எடுத்துரைப்பான்' தன்னலத்துக் காகத் தமிழினத்தின் நலமழிக்கும் 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/79&oldid=807801" இலிருந்து மீள்விக்கப்பட்டது