பக்கம்:பருவ மழை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகா அணரிந்துரை எல்லாரும் இன்பத்தை விரும்புவார்கள், இன்பம் ஆறு வகைப்படும். (1) உடம்பினுல் இன்பம் வரும். கோடைக் காலத்தில் தண்ணிரும் பனிக் காலத்தில் வெந்நீரும் இன்பத்தை நல்கும். (2) நாவினல் நல்லுணவை நுகரும்போது இன்பம் எய்தும், (3) நாசியினல் நறுமணம் நுகரும்போது இன்பம் எய்தும். (4) கண்ணினல் படக்காட்சி, வணக்காட்சி, பொருட் காட்சி, கடற்காட்சி இவைகளைக் காணும்போது இன்பம் எய்தும், (5) செவியினல் இன்னிசை கேட்கும்போது இன்பம் எய்தும், இந்த ஐந்து இன்பங்களைப் பார்க்கினும் உயர்ந்தது, செந்தமிழ் இன்பம். (6) செந்தமிழின்பம் சிறந்தது. இது எண்ணுந் தொறும் எண்ணுந் தொறும் அறிவில் இன்பம் சுரக்கும். இந்த சிறந்த செந்தமிழின்பத்தை நம் நாட்டில் கவிஞர்கள் படைக்கின்ருர்கள். சேக்கிழார், கம்பர், இளங்கோவடிகள், புகழேந்திய பழம்புலவர்கள் படைத்த செந்தமிழின்பம் நம் நாட்டில் கங்கா நதி போல வற்ருது இன்றும் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/8&oldid=807802" இலிருந்து மீள்விக்கப்பட்டது