பக்கம்:பருவ மழை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னபுத்திக் காரர்களைச் சினத்தியால் சுட்டெரிப்பான் உருவம் சிறிதெனினும் உரம்படைத்த நெஞ்சுடை யான்! படர்ந்தகன்ற ஏர்நெற்றி-பார்வையிலே ஊடுருவல்! அடர்ந்தழுெந்த பெருமீசை.அன்றவிந்த அடக்ககடை தூய கதராடைத் தோற்றத்தி லேஎளிமை, வாய் திறந்தால் செந்தமிழ்த்தேன்! வஞ்சகரைத் தாக்கிடும் நா! இத்தனையும் சேர்ந்ததொரு எழிலுருவே சிவஞானம்! சத்தியசோதனைபுரியும் தமிழகத்துக் காந்தியவன்! தமிழைத் தமிழினத்தைத் தமிழகத்தைத் தமிழ்ப் LIGööTöö)L J, இமயத்தின் உச்சியிலே ஏற்றிவைத்த ஒளிவிளக்கு! அன்னேன் தலைமையின்கீழ் அணிவகுத்துத் திரண்டு கிற்கும் கன்னித் தமிழன்னைக் காவலர்கள் சேவைகளைச் சொன்னலும் வாயினிக்கும் துரயோர் உளமினிக்கும்! என்னவர்கள் பெருமைதனை எடுத்துரைத்து மாளாது! தலைநகரைக் காத்தளித்தார்! தணிகையினை மீட்டளித்தார்! அலைதவழும் தென்குமரி அதனையும் சேர்த் திடஉழைத்தார்! அன்னைத் தமிழ்மொழியை அரியணையில் ஏற்றி வைத்தார்! சென்னைக்குத் தமிழகமாம் திருப்பெயரும் சூட்டி வைத் தார்! பள்ளிகளில் தமிழ்மொழியைப் பயிற்சிமொழியாக்கி வைத்தார்! தெள்ளுதமிழ்க் காவலர்க்குச் சிலையெடுக்கத் துணை புரிந்தார்! 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/80&oldid=807803" இலிருந்து மீள்விக்கப்பட்டது