பக்கம்:பருவ மழை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புயர் வில்லா உயர்குணச் சீலன்! தப்பிதம் செய்வோர் தமக்கொரு காலன்! சிலப்பதி காரச் சிந்தையும் திருக்குறள் நிலைத்திடும் நெஞ்சமும்; நீதிக்குப் போர்ப்பல விளைத்திடும் வீரத்தை விளக்கிடும் மீசையும் களங்கமில் உறுதியைக் காட்டிடுங் கண்களும் அமைதியும் நேர்மையும் அரணுய்ப் படைத்தவன்! தமிழகம் செய்தநற் றவத்தாற் கிடைத்தவன்! திருவுயர். ம.பொ. சிவஞான மெனும் ஒருதமிழ்த் தலைவன்! உயிர்நெறிச் செல்வன்! எடுத்திடும் முடிவுகள் யாவையும் வெற்றியாய் முடித்திடும் திறமைசேர் மூதறி வாளனும்! கண்ட வெற்றிகள் கணக்கில இன்னும் உண்டு; தமிழகம் உயர்ந்திடத் தொண்டுகள்! அவற்றுள்... இந்தியப் பேரர(சு) இணைப்பொடு சுதந்திரச் செந்தமிழ் ஆட்சியும் சிறப்புற அமைந்திட எத்தனை எத்தனை இன்னல்கள் கேரினும் சிந்தை தளர்ந்திடோம் செயலில் அயர்ந்திடோம்!

  • உமாவில் வெளிவந்தது

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/83&oldid=807806" இலிருந்து மீள்விக்கப்பட்டது