பக்கம்:பருவ மழை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியாத்தில் சமதர்மம் செந்தமிழின் செல்வத் திருவுயரும் பேரவைக்கண் வந்திருக்கும் தாய்க்குலமே! வண்ணத் தமிழ்வளர்க்கும் அறிஞர் பெருங்குழுவே! அமுதக் கலைஞர்களே! நெறிதவரு நேர்மையுடன் நெஞ்சுறுதி கொண்டென்றும் தமிழரசுக் கழகத்தைச் சார்ந்தே பணிபுரியும் இமையா விழிப்புடைய இளம்வீரச் சிங்கங்காள்! செந்தமிழர் வாழ்வைச் சிறப்பிக்க வந்துதித்த இந்தத் தலைமுறையின் இணையற்ற கற்றலைவா! அகிலத் திருமுகமாய் அன்பின் நிறைவிடமாய்த் திகழும் தமிழகத்தின் திலகமெனும் தஞ்சை மாவட்டங் தன்னில் மத்தியிலே மகரந்தப் பூவட்டம் போலிருக்கும் புகழ்வட்டத் திருக்குடந்தை மாநகரின் செந்தமிழ்த்தேன் மாந்தத் திரண்டிருக்கும் மாணவரே! பெரியோரே! மாண்புடைய கல்லோரே! நல்லோர் அனைவருக்கும் நான் பணிவோ டிங்கே சொல்லும் வணக்கத்தை தூய மனத்தோடு கேட்பீரென நினைந்து கிளர்ச்சியில் ஆட்பட்டு வந்தேன் காப்பீர் எனது கருத்துரையைச் செவிமடுப்பீர்! இலக்கியத்தில் அரசியலை இணைத்து அறம்வளர்க்கும் இலட்சியத்தைக் கொண்டு இடையின்றிச் செயலாற்றும் தமிழகத்தின் தவச்செல்வம் தமிழ்வளர்க்கும் தனியரங்கம் 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/85&oldid=807808" இலிருந்து மீள்விக்கப்பட்டது