பக்கம்:பருவ மழை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரசுத் கழகத்தின் தலைவரெங்கள் ம.பொ.சி. காட்டும் வழியினிலே கன்னித் தமிழர்களின் நாட்டுக் குழைத்துவரும் கல்லவருள் காைெருவன் தெள்ளுதமிழ் நாட்டின் சிறப்புயர்ந்த பண்பாட்டின் உள்ளமெனத் திகழும் உயர்குடந்தைத் திருநகரில் கடக்கும் கவியரங்கில் நான்தலைமைப் பூணுதற்குக் கிடைத்தபயன் குறித்து கிளர்ச்சி மிகக் கொள்ளுகின்றேன்! செந்நாப் புலவர்களே! சீருயர்ந்த கவிஞர்களே! என்மாண் புயர்இனத்தின் இலக்கியம் செய் சிற்பிகளே! நாமெல்லாம் நம்மினத்தின் நற்பெருமை தனையிந்தப் பூமியெங்கும் பரப்புதற்குப் பொறுப்பேற்றுக் கொளல் வேண்டும் இளங்கோவும் வள்ளுவனும் இன்பத்தமிழ்க் கவிஞன் களங்கமிலா கற்கலைஞன் கம்பகாட் டாழ்வானும் தங்கத் தமிழகத்தின் தன்மதிப்பைக் காத்துவந்த சங்கப் புலவர்களும் தமிழ்வளர்த்த வள்ளல்களும் வீரமறக் குலத்தின் விரிவுரையாய்ப் பாட்டிசைத்துப் பாரோர்க் குரைக்கவந்த பாரதியின் பரம்பரையில் நாமும் கவிஞரென நாவசைக்கத் துணிந்து விட்டோம்! ஆமாம்; தமிழின் மேல் ஆசை கொண்ட காரணத்தால்! நாட்டுக்கு இன்னல்களும் நலிவும் விளைத்துப் பண் பாட்டைக் கெடுத்துவரும் பாவிகளின் கூட்டத்தை ஒட்டித் தமிழகத்தின் உயர்வை நிலைகாட்டப் பாட்டிசைத்துப் பண்பாட்டின் பகைவர்களைப் புறங்கான ஏட்டையே கேடயமாய் எழுத்தாணி வாள்கொண்டு ஒட்டை உடைசல்களை உளறுவாய் வீரர்களை வேட்டுவைத்துத் தீர்த்து வெற்றி வாகை சூடுதற்குப் பாட்டெழுதிக் குவிப்பதையே பணியாகக் கொளல் வேண்டும்! 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/86&oldid=807809" இலிருந்து மீள்விக்கப்பட்டது