பக்கம்:பருவ மழை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுமட்டும் போதாது; இன்னும் சமூகத்தில் பொதுமை மலர்வதற்குப் புதுப்பாடல்பல வேண்டும்! பகுத்துண்டு பல்லுயிரும் பலன்காணும் திட்டங்கள் வகுத்திங்கே சமவாழ்வு வாழ்வதற்குப் பண்வேண்டும் 'இல்லாருமில்லை உடையாருமில்லை'யென்னும் சொல்வேத மாய்க்கொள்ளும் துணிவுகொள்ளும் பண்வேண்டும்! தனிமனிதன் சோற்றுக்குத் தடுமாறச் செய்கின்ற அணியாய அரசியலை அழிப்பதற்குப் பண்வேண்டும் தமிழ்மொழியும் தமிழ்கிலமும் தமிழினமும் செழிப்பதற்குச் சுமையாய் இருப்போரைத் தொலைப்பதற்குப் பண்வேண்டும் பெண்ணடிமைப் பித்தும் பிறப்பால் இழித்துரைக்கும் எண்ணமெல்லாம் மாய்ப்பதற்கும் எத்தனையோ பண்வேண்டும் எண்ணும் புதுமையெல்லாம் எய்துதற்குக் கோடிகோடிப் பண்கள் எழுச்சியுடன் பாடும் திறம்வேண்டும் இத்தகைய எண்ணமெலாம் இன்பக் கவிதைகளாய்ச் சித்தரித்துக் காட்டுதற்குச் சிந்தனை செய்சிற்பிகளே! வாருங்கள், வந்து வளமார்த் தமிழ்க் கவிதை மாரியெனப் பொழிந்தெம் மனத்தைக் குளிர்வியுங்கள்! என்றுங்களை அழைத்து எத்தன் தலைமையுரை தன்னை முடிக்கின்றேன் தமிழ்வாழ்க வாழ்கவென்றே! 8 குடந்தையில் நடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில், இலக்கியத்தில் சமதர்மம் என்ற தலைப்பில் 5.7-59 அன்று பாடிய கவியரங்கத் தலைமையுரை. 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/87&oldid=807810" இலிருந்து மீள்விக்கப்பட்டது