பக்கம்:பருவ மழை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் هریس تحصیه میساخعیین خصیتخت. "جمی" میs "م உலகமெல்லாம் எங்கள் உள்ளம்-எங்கள் உள்ளத்தின் மற்ருெரு பெயர்தான் இவ்வுலகம் கலைகள் எல்லாம் எங்கள் உள்ளம்-இந்தக் கழனியிற் பூத்துக் கமழும் மலர்கள்! கற்பனை என்னும் கடலில்-எண்ணக் கப்பலை எங்கும் செலுத்திச் செலுத்தி அற்புதங்கள் பல காண்போம்-அவை யாவையும் யாவர்க்கும் அள்ளிக் கொடுப்போம்! புவியை அளக்கும் எம்உள்ளம்-காணும் புன்மைகள் யாவையும் போக்கிடுதற்குக் கவிதைப் பல்லாயிரங்கோடி-செய்து காரிருள் காயுங் கதிர்என நிற்போம்! அழகினைக் கண்டு களிப்போம்-அவை யாவையும் சேர்த்துத் திரட்டி எடுத்துச் செழுந்தமிழ்த் தேனில் குழைத்து-உயர் - தீங்கவியாக்கிச் செகத்துக் களிப்போம்! இயற்கையில் இன்பத்தைக் காண்போம்-அந்த இன்பத்திலே சொக்கி எம்மை மறப்போம். மயக்கம் தெளிந்தபின் நாங்கள்-கண்ட மட்டற்ற இன்பத்தைக் கொட்டிக் கொடுப்போம்! வானவில் மின்முகில் மின்னல்-குளிர் வட்ட நிலாவொரு செங்கதி ரெல்லாம் மோகனக் கதைபல சொல்லும்-அதை முத்தமிழாலுங் கவிசெய்தளிப்போம்!

  • கலைவாணி-1-7-44

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/88&oldid=807811" இலிருந்து மீள்விக்கப்பட்டது