பக்கம்:பருவ மழை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது கவிதை? SAMMMMMMSMMMMMMSMMMMMMMMMMM MMMM MMSMSMS MMS MMMMMMMMS தமிழ்வட்டம் தன்னைச் சார்ந்தே பணிபுரியும் இமையா விழிப்புடைய எனதருமைத் தோழர்களே! வேற்றுார்க்குச் சென்றிருந்தேன், விட்டுக்கு வந்த பின்னே நேற்றைக்குத்தான் இந்த நிகழ்ச்சிநிரல் தனைப்பார்த்தேன் ஆற்றுாரார் அவைத்தலைமை ஆற்றும் கவியரங்கில் மாற்றம் நிகழ்த்திவிட மனமில்லாக் காரணத்தால் ஏதோ சிலவரிகள் எழுதிவந்தேன் கவிதையென, தீதோ! நலனே தீர்ப்பளிப்பதுங்கள்கடன்! புது வருடம் பிறந்தஇந்தப் புனிதத் திருகாளில் எதுகவிதை எனுந்தலைப்பில் இனியபல கவிதைகளைப் பொது முறையில் திறயுைம் புலவர்களின் மத்தியிலே 'இது கவிதை' எனச் சொல்லி ஏமாற்றேன்; ஏமாறிர்! ஆலுைம் இன்றெந்தன் அருமைத் தமிழ்மொழியின் தேனுர் கவிக்கலையைச் சிதைப்போர்க்குப் பஞ்சமில்லை! யாப்பும் இலக்கணமும் அணியும் தெரிந்தெழுத்தைக் கோப்பதுதான் கவிதையெ ன்ருல், குப்பையிலே போடென்பேன்! 5 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/89&oldid=807812" இலிருந்து மீள்விக்கப்பட்டது