பக்கம்:பருவ மழை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

锦斜 VII இத்தகைய வித்தகத் தமிழ் மரபில் வந்தவர்; அன்பர் உயர் திரு. கலைமாமணி கு. சா. கிருஷ்ணமூர்த்தியவர்கள். கலைஞர் உலகில் இவர் செய்த, செய்யும் அரும்பணிகள் பாராட்டுதற்குரியன. இவர் திரையுலகிலும் பலப்பல அற்புதப் பாடல்களைப் படைத்திருக்கின்ருர். இவருடைய செந்தமிழ்ப் பாடல்கள் வானருே?-என மகிழுமாறு தேறுை போல நம் செவியில் பாய்ந்து சித்தத் தில் தித்திக்கின்றன. கனியமுதம் போன்ற இனிய கவிகள் நமக்குத் தெம்பூட்டுகின்றது. மழை நலம்புரியுமாயினும் அது காலத்தில் பொழிந்தால் தான் நலம் விளையும். இதல்ை கம்ப நாடர் "கற்பில் நின்றது காலமாரியே' என்று கூறுகின்ருர், அந்த முறையில் அன்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி பருவ மழை' அரிய செந்தமிழ் இன்பத்தைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். இதனை வானதி பதிப்பகம் அன்புருவாய திரு. திருநாவுக் கரசு அவர்கள் அச்சிட்டு வெளியிடுகின்ருர், இவருடைய தமிழ்த் தொண்டு வாழ்க. சென்னை-2 } அன்பன் 26–7–78, கிருபானந்தவாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/9&oldid=807813" இலிருந்து மீள்விக்கப்பட்டது