பக்கம்:பருவ மழை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பெதுகை மோனேயின் றி அடுக்குச்சொல் வரிவரியாய்ச் சேர்ப்பதுதான் கவிதையென்ருல், சீசீசீ” எனவுரைப்பேன்! புரட்சியின்றி உணர்ச்சியின்றிப் புதுமையற்ற சொல்லடுக்கி அரட்டுவதுகவிதையில்லை; அவற்ருலோர் பயனுமில்லை. முந்தியவர் பெருமைசொல்லி, முண்டிருக்கும் சிறுமை எள்ளி வந்திடும்கா லம்சிறக்க வழிகாட்டல் கவிதையென்பேன் தொல்காப்பியம் முதலாய்த் தொடர் காப் பியங்களெனப் பல்காப்பியங் களைநாம் படித்தோம் பயனடைந்தோம். பக்திச் சுவையூட்டிப் பரமனருள் கூட்டித் தித்திக்கும் ஞானச் சிகரத்தில் ஏற்றி வைக்கும் சித்தத்தின் மாசகற்றிச் சிறுமைப் பிறப்பறுத்துச் சுத்த சுயம் பென்னும் ஜோதியினைக் காட்டுவிக்கும் சாத்திரங்கள் எத்தனையோ! சன்மார்க்கப் போதனை . சொல் சூத்திரங்கள் எத்தனையோ துதிப்பாடல் எத்தனையோ! கன்னற் சுவையமுதக் காதல் கலைவளர்க்கும் உன்னதாற் காவியங்கள் உயர்தமிழில் எத்தனையோ! வேறு ஐம்பெருங் காப்பி யங்கள் அகமுடன் புறமும் பற்றும் கம்பனின் ராம காதை, காதலும், துதும், இன்னும் 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/90&oldid=807814" இலிருந்து மீள்விக்கப்பட்டது