பக்கம்:பருவ மழை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லி பாரதமும் மேலும், வியத்தகு நைடதமும், நல்லியில் நளவெண்பாவும், நாங்லம் புகழ்க்கோவையும், சொல்லிலே இனிக்கும் சந்தச் சுவைதிருப்புகழ்சேர் பண்ணும் மெல்லிசைச் சிந்துப் பண்ணும், மேன்மைசேர் சித்தர் - பாட்டும், தரணியே புகழும்வீரத் தமிழ்வேந்தன் கலிங்கத்துப் போர்ப் பரணியும், பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும், பின்னும் கல்லாடம் கற்றுத்தேர்ந்த கலைவாணர் முன்னே நின்று சொல்லாடக் கூடாதென்னும் சொல்லே நூற்பெருமை சாற்றும்! உலகத்தின் ஒளிஇரண்டாம், ஒன்று விண்கதிரோன்! மாந்தர் கிலைபெற்று வாழும்ரீதி நிகழ்த்திடும் குறள் மற்ருென்ரும்! கல்தோன்றி மண்தோன்றுக் காலத்தின் கணக்கைச் சொல்வார் முன்தோன்றி உலகில் வாழ்ந்த மூத்தகுடி தமிழரென்பார்! என்றைக்குப் பிறந்தாளென்று எவருமிங் கரிதியிட்டு மன்றத்திற் சொல்வாரில்லை, வண்டமிழ் மொழித்தாய் ஆயுள்! காலம்பல் லாயிரங்கள் கடந்திட்டா ளெனினும் கன்னிக் கோலத்தின் எழில் குலுங்கக் குறுநகை பூக்கும் என்தாய்! 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/91&oldid=807815" இலிருந்து மீள்விக்கப்பட்டது