பக்கம்:பருவ மழை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட் கருணையாலே செந்தமிழ்க் கருவூலங்கள் ஒருபெரும் மலைபோல் ஓங்கி, உலகிடைக் குவிந்ததம்மா! வழிவழி வளர்ந்த அந்த வண்டமிழ்க் கருவூலத்தை விழியெ னக்காக்கும் வாழ்க்கை விளக்கமென் றெண்ணிடாது வந்தேறும் இனத்திற்கெல்லாம் வளமான வாழ்வைத் - தந்தும் செந்தமிழ்ப் பண்பாடெல்லாம் சிதைத்திடும் துணிவைத் தந்தும் பிறமொழித் தாகத்தாலும் பிறமத மோகத்தாலும் அறவழித் தமிழ் நூல்கள்பல் லாயிரக் கணக்காய் - அன்னுள் ஆற்றில் பாழ்க்கிணற்றில் ஏரி அகழியிற் குளத்தில் யாகக் கூற்றுவர் நெருப்பிலிட்டும் கொளுத்தியே அழித்ததோடு காலத்தால், கடலின் கோளால், கரையானுக் கிரையாய் இந்த ஞாலத்தில் அழிந்த நூல்கள் கலனெல்லாம் உணர்ந்தோர் யாரே? சென்றவை யெல்லாம் போக, சிந்திய மணிகளென்ன இன்றுகம் கண்முன் காணும் இலக்கியச் செல்வமேகம் சிநதனைப் பயிர்க்குவானம் தந்திடும் மழையாமென்ருல் செந்தமிழ் மொழித்தாய் ஆற்றல் திறனெல்லாம் உரைப்போர் யாரே? தமிழ்வட்டம் இரண்டாவது ஆண்டுவிழாக்கவியரங்கம் 13-4-69. 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/92&oldid=807816" இலிருந்து மீள்விக்கப்பட்டது