பக்கம்:பருவ மழை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பார்வையில் ஒளவையார் JS JSMSJSJMASASAS SS SAAAASAASAASAASAASAASAASAASAAASMAeSAASAASAASAASAASAASAA பாரதிக்குப் பெருமை சேர்க்கச் சங்கம் வைத்துப் பல்லாண்டாய் விழாவெடுக்கும் அன்பர் கட்கும் சீருயர்ந்த கவியரங்கத் தலைமை யேற்கும் திருவாளர் டாக்டர்.மெ. சுந்த ரர்க்கும் பாரதத்திற் பண்டிருந்தே இக்காள் மட்டும் பண்பட்ட பெரியோர்தம் சிறப்பை யெல்லாம் பாரதியின் பார்வைவழிக் கவிதை பாடும் பாவலர்க்கும் அவையினர்க்கும் வணக்கம் சொன்னேன். வாழையடி வாழையெனத் தனக்கு முன்னே வாழ்ந்தபெரும் புலவர்களை வணங்கிப் போற்றிச் சூழலினுல் தாழ்ந்திருந்த தமிழ கத்தின் துயர்துடைக்கத் துடித்தெழுந்துத் திட்ட மிட்டிங்(கு) ஏழமையை அடிமையெனும் இழிவைப் போக்க எழுச்சிமிகுங் கவிதைபல யாத்துத் தந்து கோழையரை வீரர்களாய் மாற்ற வந்த கோமகன்கம் பாரதியின்கொற்றம் வாழ்க! கவிதையென்ருல் உணர்ச்சிதனைக் கவ்வ வேண்டும் கனல்பறக்கும் சொற்களங்கே தவ்வ வேண்டும் நவநவமாய்க் கருத்தணிகள் துள்ள வேண்டும் கலிவகற்றும் வழிமுறைகள் விள்ள வேண்டும் 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/93&oldid=807817" இலிருந்து மீள்விக்கப்பட்டது