பக்கம்:பருவ மழை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவையனைத்தும் பொருந்துவதாய் இந்நூற் றண்டில் இவ்வுலகில் இருந்தமகா கவிக ளுக்குள் சுவைப்புதுமைக் கவித்தலைமைப் பூணும் மன்னன் சுப்ரமண்ய பாரதியே! மறுப்பார் உண்டோ? பாசிசத்தின் கொடுமைகளை நீக்கு தற்கும் பாரதத்தின் அடிமைமையிருள் போக்கு தற்கும் சோஷியலிசப் புதுவுலகைச் சமைப்பதற்கும் சுதந்திரத்தின் நற்பயனைச் சுவைப்பதற்கும் பேசரிய காந்தியம் தழைப்பதற்கும் பிற்போக்குச் சக்திகளை அழிப்பதற்கும் மாசகற்றும் ஒளிச்சுடராய் தேசீ யத்தின் மாமணியாய் பாரதியே அவதரித்தான்! தானேதான் தமிழ்க்கவிதை மன்ன னென்று தறுக்குற்றுத் தம்பட்டம் அடித்துக் கொண்டு வானளை வீணுக்கும் திருக்கூட் டத்தார் வாழுகின்ற நாட்டில்தான் அவனும் வந்தான்! ஆலுைம் தனக்குமுன்னே உயர்ந்து கின்ற அறிஞர்கட்கும் கலைஞர்கட்கும் ஞானியர்க்கும் தேகை அமுதாகக் கவிதை தந்த செந்தமிழ்கற் கவிஞர்கட்கும் பெருமை சேர்த்தான்! அத்தகைய ஞானியருள் சிறந்தோ ரான ஒளவை-திருவள்ளுவனுர்-இளங்கோ-கம்பன் சத்ரபதி சிவாஜிமன்னன்-தாயு மானுர்சமரசமெய் ஞானவள்ளல் இராம லிங்கர்உத்தமர்கம் திலக பிரான் லஜப திராயர் உலக ஒளி காந்தியண்ணல்-உயர் வ. உ. சி.சித்தன் உ. வே. சாமினதன்--இரவி வர்மாதிறத்தினைப்பா ரதிநோக்கிற் செப்பச் சொன்னர் 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/94&oldid=807818" இலிருந்து மீள்விக்கப்பட்டது