பக்கம்:பருவ மழை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களுக்குள் ஒளவையாரை எனக்குத் தந்தார்! என்னென்பேன் என்னென்பேன் அவள்தன் மாண்பை! புவியிலெந்த நாடும்எந்த மொழியும் காணுப் புனிதவதி அவட் கிணையாய் யாரைச் சொல்வேன்? தவச் செல்வி! தமிழ்ச் செல்வி அறிவின் செல்வி! சமாதானத் தூதுசென்ற வெற்றிச் செல்வி! நவகவிதை நாயகியாம் ஞானச் செல்வி! கந்தமிழர் புகழ்க்கல்விக் கலையின் செல்வி ஓங்குபுகழ் தமிழ்முதலாம் பாரத த்தின் உயர்மொழிகள் அத்தனையும் ஒழித்துக் கட்டித் தீங்கிழைக்கும் பயிற்சிமொழி ஆங்கி லத்தைத் திணிப்பதற்கு மெக்காலே முயன்ற போது, ஈங்கிதனுல் இந்தியாவை இழந்திட் டாலும் எங்கள்மொழி இலக்கியத்தின் கர்த்தா வான பாங்குயரும் ஷேக்ஸ்பியரை ஷெல்லி தன்னைப் பாரில்இழந் திடத்துணியோம் எனச்சொன் னும்ை! அன்னியன்மெக் காலேயின் உரையைக் கேட்டே ஆர்த்தெழுந்து பாரதியார் மறுத்து ரைத்தார்! என்னினிய தமிழ்மொழியில் மேலை நாட்டு இப்சனைப் போல், கீட்சைப்போல் ஷேக்ஸ்பி யர்போல் உன்னதாற் கவிஞர் பலர் உரைக்க ஒப்பற்ற தமிழ்க்கிழவி ஒளவை யைப்போல் தன்னிகரில் லாப்பெண்பாற் புலவர் இந்தத் தாரணியில் எங்கேனும் பிறந்த துண்டோ? பெருமையுறும் இலக்கியங்கள் எல்லாம் ஒர்பால் பிரித்து வைத்துப் பிறிதொருபால் ஒளவை யாரின் அருமையுறு நூலனைத்தும் குவித்து வைத்தே அவற்றுளெதை ஏற்றிடுவா யென்று கேட்டால்

                  79
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/95&oldid=1412638" இலிருந்து மீள்விக்கப்பட்டது