பக்கம்:பருவ மழை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவளர்க்கும் அறங்களெல்லாம் எளிமை யாகச் செப்புகின்ற ஒளவையார் நூலே ஏற்பேன்! பிறிதனைத்தும் மீட்டுமிங்கே சமைத்தல் கூடும் பெறற்கரிய ஒளவைநூல் போல் சமைப்பார் யாரே? ஒதிடுவி ரென்றுமிக இறுமாப் போடு உரத்தகுர லெழுப்பியறை கூவி இந்த மேதினிக்கெல் லாம்ஒளவைப் பெருமை தன்னை விரித்துரைக்கும் பாரதியின் திறம்தான் என்னே! மாதொருத்தி மானுடத்தின் மாண்பு யர்த்த வகுத்தளித்த நீதிநெறி விளக்கம் கண்டும் பேதையரென் றவர்குலத்தைப் பேசு வோரைப் பித்தரென்றும் பேயரென்றும் சாடு கின்ருன்! நரைமுப்பு சாக்காடு பிணிக ளண்டா நல்லமுதக் காயகல்பம் ஒன்று கண்ட கருநெல்லிக் கணிஅதிகன் கொடுக்கத் தின்ற காரணத்தால் ஒளவைபல நூற்ருண் டிங்கே அருள்பொழியும் இளமையெழில் அறிவும் கொண்டே அறநெறிசேர் சாத்திரங்கள் வகுத்து மாந்தர் இருள்கடியும் ஒளிவிளக்காய் இருந்தா ரென்ருல் இதயத்திற் களிதுளும்பும் செய்தி யன்ருே? கடைச்சங்கக் காலமதிற் பெண்பாற் பல்லோர் கவிதைகளைக் காணுகின்ருேம், அவற்றுள் ஒளவை படைத்திட்ட பாடல்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசத்தால் துள்ளுகின்ருேம்; சிதைந்த தன்றிக் கிடைத்திட்ட கவிதைகள்தான் இவைக ளென்ருல் கிடைக்காதே அழிந்தவற்றின் சிறப்பும் யாதோ! புடைக்கின்ற போர்க்களத்தில் பரணி பாடும் போர்மறத்தி ஒளவைபுகழ் உரைக்கப் போமோ! 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/96&oldid=807820" இலிருந்து மீள்விக்கப்பட்டது