பக்கம்:பருவ மழை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகமானின் அரசவையின் புலவராகி அவனிடம்போ ரிடத்துணிந்த தொண்டை மானின் பதியெழுந்து திறன்மேவும் தூது ரைத்துப் பகைமாற்றி நட்பினுக்கோர் பால மாகிப் புதியசமா தானஉடன் படிக்கை கண்ட புரட்சிப்பெண் பாற்கவிஞர் ஒளவை யைப்போல் இதயமுள்ள ஒருகவிஞர் உலகின் கண்ணே எவர் பிறந்தார் சிறப்புடனே எடுத்துச் சொல்ல? களவியலைக் கற்பியலைக் காதல் விஞ்சும் கற்பனைசேர் கவிதையைக் காட்சி தன்னை இளமைவிருந் தெனும் அகத்தில்-புறத்தில் மற்றும் இளமைதரும் குறுந்தொகையில் கேட்டோம் பின்னும் உளவியலை ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் உலகநீதி மூதுரையா திகளாற் கண்டோம் அளவையிலா வேழமுகம் விகாய கர்கல் அகவலுடன் தனிப்பாடல் பலவும் கேட்டோம்! இத்தகைய பெருமையுறும் ஒளவை யாரின் ஏற்றங்கள் எடுத்தெடுத்துப் போற்றிச் சாற்றும் உத்தமனும் அமரகவி பாரதி யார்தம் உரைகடையில் மட்டுமின்றித் தான்இயற்றும் சித்திரப்பொற் கவிதைகளைத் தீட்டு தற்குச் சிறப்புமிக்க சுவற்றினைப்போல் அன்னை யாரின் நித்திலச்சீர் கவிதைகளைப் பயன்படுத்தும் நேர்த்தியைக் கண்டுவக்கா நெஞ்சம் உண்டோ? பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப் பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ? கண்டார்க்கு நகைப்பென்னும் உலக வாழ்க்கை காதலெனும் கதையினிடைக் குழப்ப மன்ருே? 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/97&oldid=807821" இலிருந்து மீள்விக்கப்பட்டது