பக்கம்:பருவ மழை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவளென் றறியிரோ? உணர்ச்சி கெட்டிர்! பண்டவ்வை அன்னையும் பிதாவும் இந்தப் பாரிடை முன் னறிதெய்வம் என்ரு ளன்ருே? ஆத்திச்சூ டிஎன்றால் அறத்தைச் சொல்லும் ஒளவையார் நூலைஆதி நூலாய்க் கொண்டே யாத்தளித்தார் இனியதொரு வழிநூ லொன்றை இதன்காப்புச் செய்யுள்முதல் அனைத்தும் வேருய்க் கோத்தளித்தார் புதுமைமிகும் ஆத்திச் சூடி கொற்றமிகு பாரதியார்! முன்னேர் தன்னை ஏத்திச்செந் தமிழினிலே செய்த ளித்த இணையற்ற நூலிதனை இதயம் வைப்போம்! 'ஜாதியிரண் டொழியவேறு இல்லை யென்று தமிழ்மகள் முன், சொன்னசொல்லை அமிழ்த மென்றும்' 'தீது செய்யும் வஞ்சகரோ டிணங்கே லென்ற” சிறப்புரையைத் திறமையுடன் பாப்பாப் பாட்டில் பாதகங்கள் செய்பவரைக் கண்டா லென்றும் பயம்கொள்ள லாகாது பாப்பா, வென்றும் மோதிமிதித் திடுவாய் நீ பாப்பா, அன்னர் முகத்தினிலே உமிழ்ந்துவிடு'என்றும் சொன்னன்! ஆதிமுதல் இன்றுவரை ஆணி னத்தார் அநீதிசெய்யும் முறைகளையே நியதி யாக்கி மாதர்களை விலங்கினம்போல் அடிமை கள்போல் வதைபுரிந்தார், பேதையென்ருர் இனிமே லந்தச் சூதனைத்தும் ஒளவையென்னும் அறிவுச் செல்வச் சுடர்க்கொடியால் தகர்ந்துவிட்ட உண்மை தன்னைப் பூதலத்திற் கெடுத்தியம்பிப் புதுமைப் பெண்ணைப் புரட்சிப்பண் பாடவைத்தான்! புதுமையன்றே: 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/98&oldid=807822" இலிருந்து மீள்விக்கப்பட்டது