பக்கம்:பருவ மழை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குலத்தை இனிஎவனும் தாழ்ந்த தென்று பேசுதற்கு ஞானமில்லை; மேலை நாட்டில் பண்ணியற்ற ஒளவையைப்போல் பிறந்ததில்லை; பாரினிலே அந்தநிலை தமிழுக் கில்லை! கண்ணிரெண்டில் வலதுகண்ணே உயர்ந்த தென்ருல்கவியரசி ஒளவையினம் வலக்கண் என்ற உண்மைதனை பாரதியார் உரத்துக் கூறும் உறுதியினை-உளப்பண்பை மறுக்கப் போமோ? சீரைத்தே டின்ஏரைத் தேடு என்றே செப்பியஒள வைமொழியைச் சிரமேற் கொண்டு பாரினிலே உழவுக்கும் தொழில்த னக்கும் பல்லாண்டு கூறிமிக வணங்கிப் போற்றி ஊரைஏய்த்து உண்டுகளித் திருக்கும் தீய உலுத்தர்களை நிந்தனைகள் செய்து தூற்றும் பாரதியின் பார்வையிலே ஒளவை யாரின் பாடல்களைப் பார்க்கின்றேன் பயன்துய்க் கின்றேன்! 'தெய்வம்இக ழேல்"என்னும் சொல்லை, மற்றும் தேசத்தோ டொத்துவாழ்' என்னும் சொல்லை 'நொய்துசோம் பித்திரியேல்' என்னும் சொல்லை கோன்பென்று அறிவுறுத்தும் ஒளவைச் சொல்லை'பொய் சொல்லக் கூடாது பாப்பா வென்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா வென்றும் தெய்வம்ாமக் குத்துணையாம் பாப்பா வென்றும் தேசத்தைக் காத்தல் செய்” யென்றும் சொன்ன்ை! இப்படியே பாரதியின் கவிதை யெல்லாம் எடுத்தெடுத்து ஆராய்ந்தால், காலம் நீளும்! தப்பிதமாய்ப் பொறுமையினைச் சோதித் துங்கள் தண்டனைக்கே ஆளாகித் தவித்தி டாமல் 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/99&oldid=807823" இலிருந்து மீள்விக்கப்பட்டது