பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பர்மாவில் பெரியார்

அடுத்த கபா ஏ என்ற இடத்தில் அமைதிக் கோபுரம் ஒன்று கட்டி அதன் அருகில் மாநாடு நடைபெறுவதற்காக மலைக்குகை போன்ற அமைப்புடைய ஒரு பெரிய கூடம் கட்டப்பட்டது.

அந்தக் கூடத்தில் தான் உலக புத்தசமயத் தலைவர்கள் கூடினார்கள்.

டாக்டர் அம்பேத்கார், இந்த மாநாட்டில் பெரியாரும் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அவருடைய விருப்பத்தை மாநாட்டுக் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

உடனே பெரியாருக்குத் தந்தி பறந்தது. உயிர் நண்பரும் தாழ்த்தப்பட்ட மக்களை முன்றேற்றுவதற்கென்றே வாழ்வை ஈடு வைத்தவருமான மற்றொரு தலைவர் அம்பேத்கார் அழைக்கிறார் என்றவுடன் பெரியாரும், தம் மற்ற வேலைகளையெல்லாம் புறத்தள்ளி விட்டு உடனே புறப்பட்டார்.

இரண்டே நாளில் பயணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்துகொண்டு அப்போதே புறப்படவிருந்த சோனாவதி என்ற கப்பலில் புறப்பட்டு விட்டார்.

பெரியார் மாநாட்டுக்குப் புறப்பட்டு வரும் செய்தி அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

இரங்கூனில் இருந்த தன்மானத் தோழர்களாகிய எங்களுக்கெல்லாம் இச்செய்தி பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

வானொலியில் இச்செய்தியைக் கேட்ட நான் பெரியாரை இரங்கூனில் பார்க்கப் போகிறோம் என்ற