பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

15

நீங்கள் இரங்கூனுக்கு வருவதாக வானொலியில் செய்தி கேட்டோம் உங்களுக்கு வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இங்கே திராவிடர் கழகம் கிடையாது. திராவிடர் முன்னேற்றக் கழகம் தான் இருக்கிறது. நாங்கள் தான் உங்களுக்கு வரவேற்புக் கொடுக்கிறோம். நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என்று அறிந்து கொள்ளவே முன்னதாக வந்தேன்".

"நீ யார் என்று எனக்குத் தெரியாதே!"

முருகு சுப்பிரமணியன் நடத்தும் பொன்னி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவன். பெயர் நாச்சியப்பன்

"கவிஞர் நாச்சியப்பனா? நீ எங்கே இந்த ஊரில்?"

"அய்யா நான் வந்து நான்கு ஆண்டுகளாகிறது. இங்கு தான் ஒரு கப்பல் உணவுப் பொருள் ஒப்பந்தக்காரிடம் வேலை செய்கிறேன். இங்குள்ள திராவிடர் முன்னேற்றக் கழகத்திற்கு இந்த ஆண்டு நான்தான் பொதுச் செயலாளர்."

"உங்களை வரவேற்பதற்கு எங்கள் உறுப்பினர்கள் ஐநூறுபேரும் உற்சாகமாக இருக்கிறார்கள்."

"உங்கள் வரவேற்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ ஏற்பாடுசெய்" என்றார் பெரியார்.

"என்ன தி.மு.க வா?" என்றார் மணியம்மையார்.

"வந்த இடத்திலே தி க என்ன தி மு க என்ன? பசங்க ஆர்வமாக இருக்காங்க. தம்பி நீ ஏற்பாடு செய்?" என்றார் அன்புத் தந்தை பெரியார்.

எனக்கு கரை கொள்ளாத மகிழ்ச்சி.

"அய்யா, எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்?"