பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பர்மாவில் பெரியார்

கூலிக்காரர்கள் எல்லாப் பொருள்களையும் இறக்கிவைத்தவுடன், "சென்னையிலிருந்து குடித்தனம் நடத்தவேண்டிய எல்லாச் சாமான்களுமே கொண்டு வந்துவிட்டாயா?" என்று மணியம்மையார் கேட்க,

கால் முகம் கழுவி விட்டு, என் மனைவி அடுப்புப் பற்றவைத்தாள்.

"என்ன செய்யப்போகிறாய்?" என்று அம்மையார் கேட்க,

"சமைக்கப்போகிறேன்" என்று கூறிக்கொண்டே, காய்கறிகள், மளிகைச் சாமான்கள், அரிசி, பருப்பு எல்லாவற்றையும் மூட்டைகளிலிருந்து பிரித்தெடுத்தாள் என் மனைவி

நான்கு நாட்களாகக் கப்பலில் வந்திருக்கிறாய். எங்களைப் போல் உனக்கும் அலுப்பாகத் தானே இருக்கும். இன்று சமைக்கவேண்டாம். எல்லோரும் ஓட்டலில் சாப்பாடு எடுத்துவரச்சொல்லிச் சாப்பிடலாம். நாளை நீ சமைத்து நாங்கள் சாப்பிடுகிறோம்" என்று மணியம்மையார் கூற, பெரியாரும் வற்புறுத்திச் சொன்ன பிறகு என் மனைவி சமைக்கும் வேலையை நிறுத்தினாள்.

"வெந்நீர் மட்டும் போடுகிறேன், எல்லாரும் குளியுங்கள்" என்று அடுப்பைப் பற்றவைத்தாள்.

"குளிப்பதா? நாளைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று பெரியார் கூற, மணியம்மையாரும், ராஜாராமும் என் மனைவியும் ஒருவர் பின் ஒருவராகக் குளித்தார்கள்.

சிறிது நேரங்கழித்து பால்கனி வழியாகத் தெருப்பக்கம் எட்டிப் பார்த்தேன்.