பக்கம்:பர்மா ரமணி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னத்தில் அறை : 115 என்னேயே நீங்கள் ஏமாற்றிப் போலீஸில் பிடித் துக் கொடுக்கவல்லவா பார்க்கிறீர்கள்! நான் ரமணியு மில்லை; மண்ணுங்கட்டியும் இல்லை” என்ருன் அந்தப் 653 Liit igðra

  • நீ ரமணி இல்லையா !” என்று ஏமாற்றத்துடன் கேட்டான் ஆனந்தன். W. -

'இல்லை. என் பெயர் பழனியாண்டி உறையூரில் என் மாமா சுருட்டு வியாபாரம் செய்கிருர். அவர் வீட்டுக்கு வந்தேன். மலைக்கோட்டையையும் பார்த்து விட்டுப்போக வந்தால், என்னைப் பிடித்துப் போலீஸில் கொடுக்கவா திட்டம் போடுகிறீர்கள், மடப் பயல்களா! டேய், இப்போதே இந்த இடத்தை விட்டு ஓடுகிருயா, மண்டையைப் பிளக்கட்டுமா ?’ என்று வலது கையை ஓங்கிக்கொண்டே ஆனந்தனின் அருகிலே வந்தான் அந்தப் புதுப் பையன் பழனியாண்டி. பாவம், ஆனந்தன் பதில் எதுவும் கூருகல், மெது வாக அந்த இடத்தைவிட்டு கழுவிவிட்டான். தன்னு டைய அருமை கண்பன் குண்டுமணி எங்கே என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் அங்கே இருந்தால் தானே! அடிவாரத்தில் அல்லவா இருக்கிருன் : சோர்ந்து போய்க் கீழே இறங்கி வந்தான் ஆனக் தன். அவனைக் கண்டதும் குண்டுமணி அருகிலே ஒடிப் போய்த் துக்கம் விசாரித்தான். போடா பயங்கொள்ளிப் பயலே! அவன் என்னே ஒர் அறை அறைந்ததற்கு, அவனுக்கு நீ ஒன்பது அறை திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமோ? ஆள் தான் யானைக்குட்டி மாதிரி இருக்கிருய்' என்று கோப மாகக் கூறின்ை ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/119&oldid=807846" இலிருந்து மீள்விக்கப்பட்டது