பக்கம்:பர்மா ரமணி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பர்மா ரமணி அருகிலே ஓடி வந்தான். அவன் பிச்சைதான் கேட் கிருன் என்று நினைத்து, போடா வேலையற்றவனே : என்று ஏசிவிட்டு, டிரைவரைப் பார்த்து ம்... நீ போ, என்று அவர் உத்தரவிட்டார். கார் வேகமாகப் பறந்து சென்றது. ஆனலும், சார் சார் என்ற குரல் மட்டும் சிறிது கேரம் பின்னுல் கேட்டுக்கொண்டே யிருந்தது. காருக்குள் இருந்த எவருமே திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பையன் பொட்டனத்தைக் கொடுக்கத்தான் சார், சா’ என்று கூவின்ை என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. - உடனே அவர், 'அடடா! ஆமாம் தம்பி. உன்மேல் தவறே இல்லை” என்று கூறிவிட்டுப் போலீஸ்கரரைப் பார்த்து, ஐயா போலீஸ்காரரே, பையன் சொல்வதெல் லாம் உண்மைதான். என் சம்சாரம் மண்டபத்திலே ஒரு துணுக்குப் பக்கத்திலே இந்தப் பொட்டணத்தை வைத்திருக்தாள். கார் வந்ததும், அவசரத்தில் அதை அவள் மறந்து பேய்விட்டான். எனக்கும் ஞாபகம் இல்லை. சற்று முன்புதான் ஞாபகம் வந்தது. உடனே காரைத் திருப்பிக்கொண்டு வந்தோம். இந்தப் பையன் மேல் குற்றமே இல் இல. குற்றமெல்லாம் எங்கள் மேல்தான்' என்ருர், பெரிய கேஸ் ஒன்றைக் கண்டு பிடித்துவிட்ட தாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர். முகத்திலே அசடு வழிந்தது பேசாமல் புடவைகளை அந்த மனிதரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கழுவிவிட்டார். உடனே கூட்டமும் கலேய ஆரம் பித்தது அந்த மனிதர், பையனைப் பார்த்து, தம்பி, நீ இதற்காக எவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிருய்! பாவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/150&oldid=807881" இலிருந்து மீள்விக்கப்பட்டது