பக்கம்:பர்மா ரமணி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரகாயகம் எங்கே ? 155 மதுரையில் சுகமாக இருக்கிறேன். தங்களைப் போலவே சிற்சபேசன் என்பவர் என்னை அன்பாக ஆதரித்து வருகிருர், தங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதினுல் எனக்கு ஆறுதலாக இருக்கும். அம்மாளுக்கும் சபா முதலாளிக்கும் எனது வணக்கம் ' என்று எழுதி, தன் மதுரை விலாசத்தையும் அதில் கொடுத்திருக் தான. அக்தக் கடிதத்தைப் பார்த்ததும், மதுரகாயகம் மகிழ்ச்சி அடைவார் ; உடனே பதில் போடுவார் என்று ரமணி எதிர்பார்த்தான், ஆளுல், ஒரு வாரமாகியும் பதில் வரவில்லை; திரும்பவும் ஒரு கார்டு போட்டான், அதற்கும் பதில் இல்லை, பிறகு இரண்டு மூன்று கார்டு கள் எழுதியும் பதிலே இல்லை. ரமணிக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. சரிதான், அவரும் கம்மைத் திருடன் என்றே நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அதனுல் தான் பதில் போடவில்லை. ஐயோ! மதுரகாயகம் கூடவா என்னே அப்படி கினைக்க வேண்டும் ' என்று கினைத்து மனம் கலங்கினன். ஆனால், மதுரகாயகமா, அப்படி கினைப்பார் ? அவன் எழுதிய கடிதங்கள் அவரிடம் போய்ச் சேர்க் திருந்தால்தானே அவர் பதில் எழுதுவார் ஒரு கடிதம்கூடப் போய்ச் சேரவில்லையே, ஏன் ? அவன் சரி யான விலாசம் எழுதவில்லையா ? சரியாகத்தான் விலா சம் எழுதியிருந்தான். அப்படி யிருந்தும், அவரது கைக்குக் கிடைக்க வில்லை : ரமணி போன பின்பு அவனுக்குப் பதிலாக நாடக சபாவிலே வேருெரு பையனைச் சேர்த்திருந்தார்கள். அவன் பெயர் சிங்காரம். சிங்காரம் சுத்த சோம்பேறி. பெரிய தூங்குமூஞ்சி. ஒரு தடவைக்கு ஒன்பது தடவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/159&oldid=807890" இலிருந்து மீள்விக்கப்பட்டது