பக்கம்:பர்மா ரமணி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊76 பர்மா ரமணி மட்டும் எரிந்துகொண்டிருந்தது. சுற்றிலும் வழவழப் பான சுவர்கள் இல்லை ; கரடுமுரடான பாறைகளே இருந்தன. சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி இவர்களில் யாராவது அங்கே இருக்கிருர்களா என்று பார்த்தான் , யாரையும் காணுேம் ! ஐயோ! இது என்ன குகை மாதிரி யல்லவா இருக்கிறது ! நம்மை ஏன் இங்கு கொண்டு வங் தார்கள் ' என்று அவன் புரியாமல் விழித்தான். மறுகிமிஷம், காமாட்சியம்மாளின் உடம்பு இப்போது எப்படி இருக்குமோ ! என்ற கவலை வந்துவிட்டது. உடனே தன்னையும் அறியாமல், அம்மா ! என்று வாய்விட்டுக் கதறிவிட்டான். அவன் அப்படிக் கத்தியதுதான் தாமதம். மற். ருெரு பக்கத்திலிருந்து நாலு முரடர்கள் அவன் இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ரமணிக்குப் பயமாக இருந்தது. ஒரு முறை அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். அந்தகாலுபேரில், மூன்று பேர் பர்மாக்காரர்கள். ஒரே ஒருவன் மட்டும் இந்தியன். அவனும் தமிழன் என்று ரமணிக்குத் தெரிந்தது.

  • தம்பி, பயப்படாதே ! உன்னை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் ' என்ருன், அவர்களில் மிகவும் பருமனுக இருக்த ஒரு பர்மாக்காரன். அவன்தான் அவர்களுக்குத் தலைவன். -

நீங்கள் யார் ? எதற்காக என்னே இங்கே கொண்டு வந்தீர்கள் : அம்மாவுக்கு ஆபத்து என்று டாக்டரைக் கூப்பிடப் போன என்னே இங்கே கொண்டு வந்து விட்டீர்களே ! ஐயோ! அம்மாவுக்கு என்ன ஆனதோ !” என்று கூறி அழுதான் ரமணி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/175&oldid=807928" இலிருந்து மீள்விக்கப்பட்டது