பக்கம்:பர்மா ரமணி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுவைக் காணுேம் ! 39 ஐயோ! அது எவ்வளவு நல்ல பேணு!’ என்று பாஸ்கரனிடம் பரிதாபத்துடன் சொன்னுள் கமலாதேவி. உடனே பாஸ்கரன், சரிதான், நான் அவன் இந்த வீட்டுக்கு வந்தவுடனே சந்தேகப்பட்டேன். நான் கினைக்கிறது எப்போதுமே சரியாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் எல்லாம் அளவோடுதான் இருக்க வேண்டும். கொஞ்சம் இடம் கொ டுத்தால் ஆபத்துத் தான் !' என்றி கூறிக் கமலாதேவியின் கட்சியில் சேர்ந்து கொண்டார். - பாஸ்கரனுக்கு ரமணி என்ருலே பிடிக்காது. ஏன் ? அவர் சாப்பிடுகிற சோற்றிலே ரமணி மண்ணை வாரிப் போட்டான ? இல்லை. ஆலுைம், காரணம் இருக்கிறது. ஒரு நாள் பாஸ்கரன் கடைக்குப்போய் சிகரெட் வாங்கி வரும்படி ரணிமயிடம் கூறினர். அதற்கு அவன், "சார், நீங்கள் என்னவேலை வேண்டுமானுலும் சொல் லுங்கள் ; செய்யத் தயார். ஆல்ை, தயவு செய்து சிகரெட் வாங்கமட்டும் என்னை அனுப்பாதீர்கள். இந்தக் கெட்ட பழக்கத்துக்கு கான் உதவமாட்டேன்’ என்று சொல்லிவிட்டான். உடனே பாஸ்கரனுக்குக் கோபம் வந்துவிட்டது : சுத்த அதிகப் பிரசங்கி!” என்று திட்டிவிட்டு மதுரகாயகத்திடம் விஷயத்தைக் கூறினர். அதற்கு மதுரகாயகம், சபாஸ்கர் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். சிகரெட் பிடிக்கமாட் டேன். பொடி, புகையிலை போடமாட்டேன். காப்பி கூடக் குடிக்கமாட்டேன். என்னிடம் பழகியவன் எப்படி யிருப்பான் ?' என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கூறினர். ஆனால், பாஸ்கரன் சிரிக்க வில்லை. சமயம் வரும். அப்போது இந்தப் பொடியனே ஒரு கை பார்த்துக்கொள்கிறேன் என்று கருவினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/42&oldid=808229" இலிருந்து மீள்விக்கப்பட்டது