பக்கம்:பர்மா ரமணி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பர்மா ரமணி சிரித்துக்கொண்டே, அப்பா! நான் பாஸ் ஆகிவிட் டேன்’ என்று புளுகினேன். அப்பா அதை நம்பி விட்டார். உடனே என்னைக் கடைக்கு அழைத்துப் போய் எனக்குப் பிடித்த ஒரு கைக்கடிகாரத்தை வாங் கித் தந்தார். வீடு வந்ததும், என்னைப் பார்த்து, ஆனந்தா! நீ தேர்ச்சி பெற்றதை ஆனந்தமாகக் கொண்டாட வேண்டுமல்லவா? அதற்காக இன்று இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக் கிறேன். நீ இப்போதே போய் உனக்கு மிகவும் வேண் டிய நண்பர்களிடம் சொல்லி வைத்துவிடு. இரவு அவர்களுடன் குது.ாகலமாகச் சாப்பிடலாம் என்ருர், அதைக் கேட்டதும், எனக்குப் பகீர்!’ என்றது. கண்டர்களை அழைத்து வந்தால், என் குட்டு வெளிப் பட்டுவிடுமே ' என்று பயந்தேன். அழைத்து வரா விட்டாலும், அப்பா விடமாட்டார். என்ன செய்வது? தர்ம சங்கடமான நிலையில் கான் சேர்த்து வைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு அன்று இரவே ரயில் ஏறி இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்...” ஆனந்தன் முழுவதையும் கூறிமுடிக்கவில்லை. அதற்குள், முதலாளி மோகனரங்கம், அப்படியானுல், நீ வைத்திருந்தது என் கடிகாரம் இல்லையா!' என்று மிகுந்த ஏமாற்றத்தோடு கேட்டார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் மேஜை அறைக்குள் ளிருந்த கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தார். அதை எடுத்துப் பார்த்துவிட்டு, ஊஹசம், இது இல்லை. இது சைமன் வாட்ச். என்னுடையது ஹோமர் வாட்ச். இதைவிட விலை அதிகம். அது அந்த ரமணியிடம்தான் இருக்கும்” என்று சொன்னர் மோகனரங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/57&oldid=808261" இலிருந்து மீள்விக்கப்பட்டது