பக்கம்:பர்மா ரமணி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 பர்மா ரமணி பிரமணி தங்கமான பையன். அப்போதே இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொன்னீர்கள். மிகவும் அவசரப்பட்டு விட்டேன். அவன் இப்போது பட்டினி கிடந்தால் அந்தப் பாவம் என்னைத்தானே சேரும் ?. மதுரகாயகம், அவன் இப் போது திருச்சியில்தான் இருப்பான். இல்லையா ?” என்று கேட்டார். அங்கேதான் இருக்கவேண்டும். அதுவும் ஒரு பெரிய நகரம். அங்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆலுைம் சுலபத்திலே வேலை கிடைத்துவிடுமா? அவனுடைய தங்கமான குணத்தைப் பற்றிப் பிறருக்கு எங்கே தெரியப் போகிறது ?”

இவ்வளவு நாள் பழகிய நமக்கே தெரியாமல் போய்விட்டதே ... அவனைப் போல் ஒரு பையன் கிடைக்கவே மாட்டான். அவனே எப்படியாவது திரும் பவும் இங்கே கொண்டு வந்துவிடவேண்டும். ஆனல் ஆபீஸ் பையனுக வேண்டாம்; உங்களுக்கு உதவியாக இருக்கட்டும். சம்பளமும் அதிகமாகக் கொடுக்கலாம்.”

'அது சரி, இப்போது அவனே எப்படிக் கண்டு பிடிப்பது? ம்... எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அதன்படி செய்தால்...?” * "அது என்ன யோசனை ? சொல்லுங்கள், சொல் லுங்கள். சீக்கிரம் சொல்லுங்கள்’ என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் முதலாளி. 'இன்று இரவு நாடகம் முடிந்தவுடனே நான் திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன். எப்படியும் ரமணியை நாளைக்குள் கண்டுபிடித்துக் கையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/91&oldid=808341" இலிருந்து மீள்விக்கப்பட்டது