பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அமெரிக்க நாட்டுப் பேராசிரியரான லாங்லி (Langley) என்பவர் 15 அடி அகலமுள்ள இரண்டு விமானங்கள் செய்து அவற்றில் சிறிய நீராவி எஞ்சின்களைப் பொருத்தினர். 1896-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதியிலும், நவம்பர் 28-ஆம் தேதியிலும் அவைகள் வெற்றிகரமாகப் பறந்தன. ஒரு தடவை அந்த விமானங்களில் ஒன்று 1 கிமிலும் 49 செக்கண்டு பறந்தது! அப்படிப் பறந்து 4,300 அடி தூரம் சென்றது. இது ஒரு பெரிய வெற்றிதான். ஆனால், அந்த விமானங்களில் மனிதன் செல்லவில்லை.

    ஏழு ஆண்டுகள் கழிந்தபிறகு, 1903-இல், லாங்லி ரோவி எஞ்சின் வைத்த ஒரு பெரிய விமானமே கட்டிர்ை.


     லாங்லி நீராவி எஞ்சின் விமானம்

மனிதன் அதில் பறந்து செல்ல முடியும் என்று காட்டுவது அவருடைய நோக்கம். அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஒர் உயரமான படகின் மேலிருந்து அதைப் பறக்கவிட்டார்கள். ஆனால், அது பறக்கவில்லை. ஏதோ ஒரு குறை பாட்டால் அது பறக்காமல் ஆற்றுக்குள் விழுந்து பழு தடைந்துவிட்டது. உள்ளேயிருந்த மனிதனுக்கு ஆபத்து ஒன்றும் நேரவில்லை. டிசம்பர் 8-ஆம் தேதி மீண்டும் ஒரு முறை இதே சோதனை நடந்தது. அந்த முறையும் லாங் லிக்குத் தோல்வியே ஏற்பட்டது.

                           20