பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமானங்கள் இறங்கக்கூடாத இடத்தில்கூட அது இறங்கும். இரண்டு மலைகளுக்கு நடுவே குறுகிய பள்ளத்தாக்கிருந்தால் அங்குகூட இந்த விமானத்தில் சென்று இறங்கலாம். நான்கு பக்கங்களிலும் வெள்ளத்தால் சூழப்பட்டு அதற்கு மத்தியிலே சிறிய இடத்தில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை ஹெலிக்கோப்டரின் உதவியால் மீட்டுக்கொண்டு வர முடியும். இப்படிப் பல காரியங்களுக்கு இது உதவுகிறது. கடல் விமானம் தரையிலே இறங்காமல் பெரிய ஏரி, கடல் முதலிய நீர் நிலைகளிலே இறங்கக்கூடியது. அதனலும் பல வசதிகள் உண்டு. ஜெட் விமானம் மிக அற்புதமானது. இதில் எத்தனையோ புதிய புதிய வகையான விமானங்கள் வந்திருக்கின்றன. அவை மிக வேகமாகப் பறக்கக் கூடியவை. மணிக்கு ஆயிரம் மைலுக்கு மேலே பறக்கக்

கடல் விமானம்

கூடிய ஜெட் விமானங்கள் இருக்கின்றன. சென்னையி லிருந்து டெல்லிக்கு ரெயிலில் போனல் இரண்டு நாள்க ளாகும் ஆனால், ஜெட் விமானம் ஒன்றில் போனல் இரண்டு

ப. ம.-4 25