பக்கம்:பறவைகளைப் பார்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணவுப் பஞ்ச காலத்திலும் வெள்ளப் பெருக்கின் போதும் எத்தனையோ விலங்குகள் இறந்து எங்கும் கிடப்பதுண்டு. இவற்றை இப்பறவைகள் தின்று தீர்த்துவிடுகின்றன. மொட்டைக் கழுகுகள் செத்தவற்றைக் கொத்தி விழுங்கும் வேகத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது.

★ ★ ★

பூக்களின் மாற்று இனப் பெருக்கத்திலும் பறவைகள் உதவுகின்றன. மலர்களின் அடியிலுள்ள மதுவை, சில இனப் பறவைகள் குடிக்கும்போது அப் பறவைகளின் அலகுகளிலும், இறகுகளிலும் மலர்களிலுள்ள மகரந்தம் ஒட்டிக்கொள்கிறது, இப் பறவை மற்றொரு மலரை நாடிச் சென்று மதுவுண்ணும்போது இந்த மகரந்தப் பொடி அதில் சேர்ந்து விடுகிறது.

★ ★ ★

காடை, கவுதாரி, காட்டு வாத்து, வாலாஞ்சிறகி, உள்ளான் முதலிய பறவைகளை ஆயிரக்கணக்கில் வேட்டையாடி எவ்வளவு கொடுமைப் படுத்துகின்றோம்! நமக்கு அவை ஒரு தீங்கும் செய்வதில்லை. அதற்கு மாறாக அவை நன்மையே செய்கின்றன.