பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் 46 டமெலாம் இதவாய்! என்று கேட்டனன் எதிர்ந்தவர் இடமெலாம் இன்றின் நகரின் அமைச்ச ரன்றிநீ ருரைக்கும் வென்றி கொள்தரத் தவர்வே றிலை"யென விளக்கி ஒன்றிய சொல்லில் ஊரவர் அனைவரும் உரைத்தார் (206) "மன்னன் சுறாயிக் மாபெருந் தீங்கினன் மணிசேர் கன்னல் தன்னினும் இனியவன் யூசரு கென்பான்" அன்ன வன்னிங் கமைச்ச னாயுள அறத்தால் இன்னல் தந்திடும் அரசையும் ஏற்றனம்" என்றார் (207) 'மணமுடித் துள்ளனா? எனத்தூ துவனுரை விரிக்க பணத்துடன் பெண்ணும் தருவதாய்ப் புகன்றனர் பல்லோர் இணங்கி யீங்குள பெண்களில் யாரையும் ஏற்று " மணம்மு டித்திட விரும்பிலன்" என்னவும் வகுத்தார் (208) "தாயிலை தந்தை தானிலை யில்லையோ தாரம் தீய செயலிலை தீயவை எதனையும் தீண்டான் சீயம் தன்னினும் தீரம் தன்னில் சிறந்தோன் ஆய அன்பினன் அறிஞரில் அறிஞன் அறத்தான் (209) என்னும் சொல்லெவர் வாயினும் எழுந்திட ஏற்றான் மன்னு புகழுடை வாலிபன் வாய்மையை வகுக்க துன்னு மனத்துடன் தன்னா டடைந்த அத் தூதன் சொன்னான் மன்னவன் அறிந்திட, அறிந்தவை தொகுத்தே (210) கேட்ட ஜின்னர சானவன் ஒளிதரக் கிளர்த்தும் வாட்ட டக்கண் வாய்த்த தன்னரும் மகளைக் கோட்ட மின்றியூ சருகெனுங் காளைக்குக் கொடுக்கத் தேட்ட மாகினன் செயல்பட விழைந்தனன் சிறக்க (211) எல்லை யிலாமகிழ் வெழுந்திட எழுந்தநல் லரசன் ஒல்லை யில்புகழ் அமைச்சனை அருகினில் அழைத்து 'வல்ல பேரெழில் வாய்த்தஎன் மகளுக்கும் வலிய எல்லை யுள்வந் திருந்திடும் யூசரு கினுக்கும் (212) இன்ன நாளினில் இனியநல் திருமணம் என்னும் நன்ன யம்மிகு செய்தியை நமதரும் நாடு தன்னி லுள்ளவர் யாவரும் தெரிந்திடத் தெளிவாய் சொன்ன யம்மு சொல்லினன் பாலிதைச் சொல்லி (213)