பக்கம்:பல்சுவை விருந்து.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பல்சுவை விருந்து

என்று பதிலிறுத்து இராவணன் சிரித்ததும் பெருகச் சிரித்ததன் பாற்படும். இராவணன் பேதோபாயத்தால் அங்கதனை வேறுபடுத்தப் பார்த்து, சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்; நானே உனக்கு இமையவர் போற்ற கிட்கிந்தைக்கு மன்னனாக்கி மகுடன் சூட்டுவேன்' என்ற போது, அங்கதன்,

வாய்தரத் தக்க சொல்லி

என்னையுன் வசஞ்செய் வாயேல் ஆய்தரத் தக்க தன்றோ

தூதுவந் தரச தாள்கை நீதரக் கொள்வேன் யானே

யிதற்கிணி நிகர்வே றெண்ணில் நாய்தரக் கொள்ளும் சீயம்

நல்லரசு என்று நக்கான்." இதுவும் வெடிச் சிரிப்பின் வகையைச் சேர்ந்ததாகும். நகைச்சுவை தோன்றும் இடங்கள்: 'நகைச்சுவைக்குப் பொருளாவன, ஆரியர் கூறும் தமிழும், குருடரும், முடவரும் செல்லும் செலவும், பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்ந் தாரும் குழவி கூறும் மழலையும் போல்வன" என்பார் பேரா சிரியர், நகை தோன்றும் இடங்கள் மிகப் பலவாகும் என்பது 'உடனிவை தோன்றும்" என்ற செயிற்றியனாரின் கூற்றினால் அறியலாகும். இங்ங்னம் பலபலவாக நகை விரியுமாயினும், அவற்றை வகைப்படுத்துமிடத்து நான்கு கூறினுள் அடங்கி விடும். தொல்காப்பியர்,

எள்ளல் இளமை பேதைமை மடனென்(று) உள்ளப் பட்ட நகைநான் கென்ப."

20. કિવ - 29 21. தொல்பொருள் மெய்ப் நூற் 1. இன்உரை

22. மெய்ப் நூற் 4 (இளம் உரை) காண்க. 23. டிெ நூற் 4 (இளம்)