பக்கம்:பல்சுவை விருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அவ்வேறுபாடுகளுக்கு ஏதுவாயமைந்த அவற்றை முறையே கண்ணாலும் செவியாலும் உணர்ந்து கொள்ளுதல் கூடும்.

இலக்கியங்களை எல்லோரும் ஒரே விதமாகத் துய்த்தல் இயலாது. அது பற்றியே இலக்கியங்களைப் படைப்பதிலும் பல கருத்துகள் எழுந்தன. நம் நாட்டுப் பெரியோர்கள் இலக்கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதை விட உள்ளத்திற்கும் அமைதி யை நல்க வல்லதாக இருத்தல் வேண்டும் என்று கருதினர். சுவை என்பது உலகம் முழுவதிலும் பரவிக் கிடக்கின்றது என்றும், ஆன்மாவின் உருவந்தான் சுவை என்றும் உபநிடதங்கள் கூறு கின்றன. கவிஞர்கள் சுவை வடிவமான ஆன்மாவை வெளி யுலகில் கண்டு அநுபவித்த பிறகு அதன் ஒளி கலந்து வீசும்படி காவியத்தை அமைக்கின்றனர். ஒரு காவியத்தைப் படிப்பதி னாலோ, அல்லது சிறந்த நாடகம் அல்லது சிறந்த படக் காட்சி யைக் காண்பதனாலோ சுவைஞர்கட்குப் புலன்களின் தெளிவு ஏற்படுகின்றது. இலக்கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப் பயனைத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும். உள்ளக் கனிவுடன் இலக்கியத்தைத் துய்ப்பவர்களே இவ்வுண் மையை அறிவர். உலக இயல்பிற்குப் படம்போலிருக்கும் கலைகளிலாவது சுவைகளை உணர்ந்து கற்றுக் கொள்ளட்டும் என்றே நமது முன்னோர்கள் நாடகங்களிலும் நாட்டியங்களிலும் காவியங்களிலும் சுவைகளைத் திறமையுடன் வளர்த்துக் காட்டி யுள்ளனர். துன்பக் கடல் போன்ற இவ்வுலகில் மம்மர் அறுக்கும் மருந்தாக இருந்து இன்பம் பயக்க வல்ல இலக்கியங்களை நாம் கவனிக்காவிட்டால் உலகில் ஆறுதல் அளிக்கக் கூடிய பொருள்களே இல்லையாகி விடும்.