பக்கம்:பல்சுவை விருந்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவை என்றால் உணவு சம்பந்தப்பட்டு ஒருவிதமான உணர்ச்சி என்று தான் இதுகாறும் கருதி வந்துள்ளோம். ஆனால் "சுவை என்ற சொல்லுக்கு இவ்வளவு விரிந்த, பரந்த பொருள் உண்டு என்பது இக்கட்டுரையைப் படித்த பின்னர் உணர முடிகிறது. காதலுக்குக் காரணமாகவும், நடிகர்களின் அபி நயத்தின்போது எதிர்ப்படும் விபாவம்', 'அநுபாவம்', 'சஞ்சாரி பாவம்' இவைகளெல்லாம். ரஸம் அல்லது சுவை என்று அறியும்போது வியப்படையச் செய்கிறது. எத்தகைய சுவையாக இருப்பினும், அவை சிருங்காரம் (உவகை) கருணம் (அழுகை) வீரம் (பெருமிதம்) ரெளத்திரம் (வெகுளி) ஹாஸ்யம் (நகை) பயானகம் (அச்சம்) பீபத்லம் (இழிவரல்) அற்புதம் (மருட்கை) சாந்தம் (நடுவுநிலை) என்ற 9 உணர்ச்சிகளுக்குள்ளேயே பாகு படுத்தியுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்கூறுகிறார். ஆசிரியர் நகைச்சுவையை முறுவலித்து நடுதல்', 'அளவே சிரித்தல்', 'பெருகச்சிரித்தல்' என்று பாகுபடுத்தித் தக்க விளக்கங்களுடன் கூறியுள்ளார். எள்ளல் பற்றியும், இளமை' பற்றியும், பேதமை பற்றியும் மடமை பற்றியும் வரும் நகைச் சுவைகளை சரித்திரச் சான்றுகளுடன் எடுத்துக் கூறியிருக்கிறார். நகைச்சுவையோடு இது நின்றுவிடாமல், சிந்தனைக்கும் விருந்தாக அமைகிறது என்றால் அது மிகையல்ல.

புதுக்கவிதையைப் பொறுத்த வரையில் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேற்கோளாக காட்டியிருக்கும் புதுக்கவிதைகளின் தலைப்புகள், சுதந்திரம்', 'காதல், 'ஆட்சிமுறை', 'விலைவாசி', 'கல்லூரிகளின் நிலை' , 'குடிப்பழக்கம்'. 'விபசாரம், 'வறுமை' போன்றவை சமுதாயத்தில் பிணைந்து நிற்கக் கூடியவைகள், சுதந்திரத்தைப் பற்றிக் கூறும்போது, காந்தி அடிகளின் புன்னகையைப் பற்றி குறிப்பிடுகிறார். காதலைப்பற்றிக் கூறும்போது 'ரோகிணி" செயற்கோளை காதலியாக உருவகப்படுத்திக் கூறுகிறார். ஆட்சி முறையைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'தண்டியாத்திரையையும்