பக்கம்:பல்சுவை விருந்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88, பல்சுவை விருந்து

போல அரசியல் வாதிகளே இத்தனைக்கும் காரணமாயிருந்தால் யார் என்ன செய்ய முடியும்? எழுத்தாளர்கள் தம் சிறு கதை களிலும் புதினங்களிலும், கவிஞர்கள் தம் கவிதைகளிலும் இவற்றை எடுத்துக் காட்டலாம். மக்கள் விழிப்படைந்து விட்டால் இவை நீங்கும்; அல்லது ஆண்டவனே அவதாரம் எடுத்து இவற்றைக் களைந்தால் கழுவாய் உண்டு. இந்தக் கலியுகத்தில் இது நடைபெறுமா? நடுத்தரவர்க்கம் தமக்குக் கீழ்மட்டத்திலுள்ள மக்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கி விட்டால் நிலைமை சீர்படும்.

புதுக்கவிதை எழுதுவோர் இந்த அவலங்களை எடுத்துக் காட்டுகின்றனர். இன்றைய புறவாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு பிரச்சினைகள், உண்மை நிகழ்ச்சிகள் புறவாழ்க்கை யுடன் நின்று போவதில்லை. அவை நம் அக வாழ்க்கையிலும் ஊடுருவுகின்றன. எதிரொலிக்கின்றன. அவை நம் அன்றாட வாழ்வில் தலை நீட்டி நம் இன்ப துன்பங்களை அறுதியிடு கின்றன. அவை நம்முடைய வறுமை, வளம், காதல், நட்பு, பக்தி, தத்துவ ஆய்வு ஆகியவற்றிலெல்லாம் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. ஆகவே, புதுக்கவிஞர்கள் உட்பட ஒவ்வொரு படைப்பாளியும் தம் சமூகச் சுற்றுப் புறச் சூழலை உற்று நோக்குகின்றனர்; பருந்து நோக்கில் பார்க்கின்றனர். நுணுக்கமாகவும் தம் பார்வையைச் செலுத்துகின்றனர். வினாக் களை எழுப்புகின்றனர்; விசாரணை செய்கின்றனர்; நம் வாழ்க்கையில் மாற்றங்களை விளைவிக்கும் புறக் கூறுகளில் தம் சிந்தனையைச் செலுத்துகின்றனர். எனவே, சுதந்திரம், ஜன நாயகம், ஜன நாயக சோஷலிசம், ஆட்சி அமைப்பு போன்ற நம் கட்டமைப்பை இன்று வழி நடத்தும் அரசியல் இதன் விளைவுக ளான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள், இவற்றால் உருவாகும் நடைமுறை வாழ்க்கை ஆகியவை நம் புதுக்கவிஞர் களின் பரிசீலனைக்கு உட்படுகின்றன. இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகளான வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி, கடத்தல், கலப்படம், கையூட்டு (லஞ்சம்). சமூகப்